புதிய சாதனை படைத்த கூகுள் போட்டோஸில் அட்டகாசமான வசதிகள் அறிமுகம்

சில வினாடிகளில் அற்புதமான புகைப்பட ஆல்பங்களை உருவாக்கும் வசதியினை கூகுள் போட்டோஸ் சேவை வழங்கி வருகின்றது.

உலகளாவிய ரீதியில் வரவேற்பைப் பெற்றுள்ள இச்சேவை தற்போது 500 மில்லியன் பயனர்களை எட்டியுள்ளது.

அத்துடன் நாள்தோறும் 1.2 பில்லியனிற்கும் அதிகமான புகைப்படங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

இச்சாதனைகளுடன் இச்சேவைக்கான மொபைல் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு வெளியாகவிருக்கின்றது.

இதில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினைக் கொண்ட பரிந்துரை முறையில் பகிர்ந்து கொள்ளும் வசதி தரப்பட்டுள்ளது.

இது தவிர ஆல்பங்களை விரைவாக உருவாக்கிக்கொள்ள Photo Books எனும் வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இப் புதிய வசதிகள் அன்ரோயிட் மற்றும் iOS சாதனங்களுக்கான இரு அப்பிளிக்கேஷனிலும் தரப்பட்டுள்ளன

 

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply