புலி படத்தின் முன்னோட்டத்தை பிரதி செய்து எடுக்கப்பட்டதா ‘மின்மினி’ பாடல்?

நடிகர் அஜய், நடிகை மிதுனா  மற்றும் பல கலைஞர்களின் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கிறது ‘மின்மினி’ வீடியோ பாடல். இப்பாடலின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றிருந்தது. இப்பாடலில் வரும் காட்சிகளும் உடைகளும், இளைய தளபதி விஜய் நடிக்கும் ‘புலி’ படத்தின் முன்னோட்டத்தை ஒத்திருந்ததாக விமர்சனங்கள் எழும்ப, நடிகர் அஜையை தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டோம்.

11779973_748208765307070_6931156292823748470_o-1024x565 (1) 11794156_748208778640402_7826487032957274217_o-1024x550

மின்மினி பாடலுக்கும் ‘புலி’ படத்தின் முன்னோட்டத்துக்கும் எதுவித சம்மந்தமும் இல்லை. முக்கியமாக புலி படத்தின் டீசர் வெளிவருவதற்கு முன்பே, ‘மின்மினி’ பாடலின் சண்டைக் காட்சிகளைப் படமாக்கிவிட்டோம். அதனால் ‘மின்மினி’யில் வரும் காட்சிகள், ‘புலி’ படத்தின் பிரதி என்பது அர்த்தமற்ற குற்றச்சாட்டு’ என்று மறுத்துள்ளார்.

 Eezhathirai

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply