பெரிஸில் பயங்கரவாத தாக்குதல் – ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு

பிரான்ஸ் – பெரிஸ் மத்திய நகர் பகுதியில் பயங்கரவாதிகளினால் பொலிஸார் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒரு உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் மேலும் இரு உத்தியோகத்தர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதிகளினால் நடாத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து, பாதுகாப்பு பிரிவினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது.

இந்த பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தில் பயங்கரவாதியொருவர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு பாதுகாப்பு பிரிவினர் அறிவித்துள்ளனர்.

தமது ஒரு உறுப்பினரினால் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக ஐஎஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸில் ஐஎஸ் அமைப்பினரால் 2015ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட தாக்குதலில் 238 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply