பெருந்தொகை சிவப்பு சந்தனத்துடன் ஒருவர் கைது

பெருந்தொகை சிவப்பு சந்தனத்துடன் ஒருவர் கைதுஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கொண்டு வரப்பட்ட பெருந்தொகை சிவப்பு சந்தனத்துடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடற்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, கல்பிடி பகுதியில் வைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய, 511 கிலோகிரம் சிவப்பு சந்தனம் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட நபரை கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சின்னப்பாடு சுங்க உப தடுப்புக் காரியாலயத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply