பொதுபல சேனா மீது சிங்கள மக்கள் வெறுப்படைந்துள்ளனர்: அமைச்சர் மஹிந்த

maqkintha-amaravera

பொதுபல சேனாவின் செயற்பாடுகள் மற்றும் ஞானசார தேரரின் நடவடிக்கைகள் என்பன குறித்து சிங்கள மக்கள் வெறுப்புக் கொண்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பொதுபல சேனா தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஞானசார தேரர் விடயத்தில் பௌத்த மக்களுக்கு நம்பிக்கையில்லை. அதேபோல் பிரதான தேரர்கள் மத்தியிலும் அவரைப் பற்றிய நல்லதொரு அபிப்பிராயம் கிடையாது.

அனைத்துச் சமூகத்தினருக்கும் முன்மாதிரியாக இருக்கவேண்டிய மதத் தலைவர்கள் இவ்வாறு இனவாதத்தில் ஈடுபடுவதாக கூறப்படுவது பௌத்த மதத்தினைப் பின்பற்றுபவர்களுக்கு அவமானமான விடயமாகும்.

பௌத்த கொள்கைகளைப் பின்பற்றி நடக்கும் தேரராகவுள்ள அவர், அதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்பதுடன், பொதுபல சேனா அமைப்பை அரசாங்கம் காப்பாற்றவில்லை” என அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply