பொது மக்களின் உதவி கோருகின்றனர் யாழ் பொலிஸார்

1627856698Yaalபோதைப் பொருள் விற்பனை மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் அறியத்தருமாறு யாழ். பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போதைப் பொருள் விற்பனை மற்றும் சட்டவிரோத செயல்களை முற்றாக ஒழிப்பதற்கு உதவி வழங்குமாறு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்தோடு குறித்த விடயங்கள் தொடர்பில் 076-6633750 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக யாழ். மாவட்டத்தில் சட்டவிரோத போதைப் பொருள் விற்பனை மற்றும் போதைப் பொருள் கடத்தல் என்பன அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் யாழில் இடம்பெற்று வரும் குற்றச்சாட்டுக்களை குறைக்கும் வகையிலேயே பொலிஸார் புதிய தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இதுதொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் யாழின் பல பகுதிகளிலும் பொலிஸார் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply