மகத்தான ஹோமங்கள்

நம் வேதங்களில் அக்னி பகவான் வழிபாடு மிக சிறந்த முறையில் நடந்து வந்ததை தெரிவிக்கின்றன. அக்னிக்கு அளிக்கப்படும் அனைத்தும் சூரிய பகவான் உதவியுடன் இறைவனை மற்றும் எவர் குறித்து ஹோமம் நடத்தப்படுகிறதோ அவரை சென்றடைகிறது. அதேபோல் சூரியபகவான் மூலமாகவே அதற்குரிய பலனும் நம்மை அடைகிறது.

அக்னிக்கு அளிக்கப்படும் பொருட்கள் சாம்பல் ஆவது மட்டும் நம் கண்களுக்கு தெரியும். மாறாக அதன் பலன் இறைவனை அடைவது சூட்சம ரகசியம். அது உரிய முறையில் காலத்தே நம்மை வந்து பிரதிபலன்களை அளிக்கும். நம் தேவைக்கு ஏற்றவாறும், பிரச்சினைக்கு உரிய முறையில் தீர்வு காணவும் ஹோமங்கள் மிக அவசியம்.

சில முக்கியமான ஹோமங்களை கீழே காண்போம்.

மகா கணபதி ஹோமம் : தடையின்றி செயல்கள் நடைபெறவும், லட்சுமி கடாட்சம் பெறவும்.

சந்தான கணபதி ஹோமம் : நீண்ட நாட்களாக குழந்தையில்லா தம்பதியர் அமர்ந்து செய்திட புத்திர பாக்கியம் கிட்டும்.

வித்யா கணபதி ஹோமம் : கல்விக்காக

மோகன கணபதி ஹோமம் : திருமணத்திற்காக

ஸ்வர்ண கணபதி ஹோமம் : வியாபார லாபத்திற்காக

நவகிரக ஹோமம் : நவகிரங்களினால் நன்மை ஏற்படும்.

லட்சுமி குபேர மகாலட்சுமி ஹோமம் : ஏழையும் செல்வந்தனாவான்

துர்க்கா ஹோமம் : எதிரிகளின் தொல்லை அகலும்.

சுதர்சன ஹோமம் : கடன் தொல்லை நீங்க, பில்லி சூன்யம் ஏவல்கள்
அகல.

ஆயுஷ் ஹோமம் : ஆயுள்விருத்தி மற்றும் நோய் நிவாரணம்.

மிருத்யுன்ஜெய ஹோமம் : ஆயுள்விருத்தி மற்றும் நோய் நிவாரணம்.

தன்வந்திரி ஹோமம் : நோய் நிவாரணம்.

ஸ்வயம்வரா ஹோமம் : திருமண தடை அகல, விரைவில் கைகூட.

சந்தான கோபால கிருஷ்ண ஹோமம் : குழந்தைப்பேறு கிடைக்க

மேதா தட்சிணாமூர்த்தி ஹோமம் : மேற்கல்வி, தெளிந்த சிந்தனை.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply