மகாலட்சுமி அருள் கிடைக்க வீட்டில் செய்ய வேண்டியவை

201708041141067892_varalakshmi-pooja_SECVPF

மகாலட்சுமி ஒவ்வொரு வீட்டிலும் வாசம் செய்ய, அருள்புரிய சில காரியங்களைச் செய்ய வேண்டும். இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

மகாலட்சுமி ஒவ்வொரு வீட்டிலும் வாசம் செய்ய, அருள்புரிய சில காரியங்களைச் செய்ய வேண்டும். அதிகாலை எழுந்ததும் கொல்லைப்புற வாசலை திறந்து வைத்து அதன் பின் தலைவாசலை திறக்க வேண்டும்.

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கை ஏற்றி லட்சுமியை வழிபட வேண்டும். வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தண்ணீர் கொடுக்க வேண்டும். மஞ்சள் கிழங்கும் கொடுக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும்.

மேலும் பவுர்ணமி தோறும் மாலையில் குளித்து சத்ய நாராயணரை, துளசி மற்றும் செண்பக மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். பால், பாயசம், கற்கண்டு, பழ வகைகளை நைவேத்தியமாக படைத்து, இரவில் உணவு உட்கொள்ள வேண்டும்.

ஒரு பெண் தன்னுடைய திருமணத்திற்கு சீராக கொடுக்கப்பட்ட வெள்ளிப் பாத்திரங்களை, தான் வாழும் காலத்தில் விற்கவோ, பிறருக்கு அன்பளிப்பாகவோ கொடுக்கக் கூடாது. வெற்றிலை, பாக்கு, திருநீறு, ஆடை, பொன் போன்றவற்றை இரு கரங்களால் ஏற்க வேண்டும்.

வளையல், சீப்பு, கண்ணாடி, கண் மை, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றை தேங்காயுடன் முறத்தில் வைத்து தானம் அளிப்பவருக்கு, லட்சுமி தேவி விரும்பிய வரங்களை அளித்து அருள்புரிவார்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply