மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வருடம் ஆயிரம் மார்பகப் புற்று நோயாளர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வருடம் ஆயிரம் மார்பகப் புற்று நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மார்பகப் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர்.ஏ.இக்பால் தெரிவித்தார்.

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் மார்பகப் புற்று நோய் மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலமும் கருத்தரங்கும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

எமது மாவட்டத்தில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் புற்று நோயாளர்கள் தொகை அதிகரித்துள்ளது.

இந்த நோயை ஆரம்பத்தில் கண்டறிவதன் மூலம் நோயில் இருந்து பாதுகாப்பை தேடிக் கொள்வதுடன், நோய் மேலும் பரவாமல் தவிர்த்துக் கொள்ள முடியும்.

இலங்கையில் கடந்த வருடம் இணங்காணப்பட்ட புற்றுநோயாளர்களின் மொத்த தொகை இருபத்தி எட்டாயிரம், அத்தொகையை விட இந்தவருடம் கூடுதலாக அதிகரித்துள்ளது.

இந்த நோய் பரபுவதற்கு நமது உணவுப் பழக்கங்களும், பரம்பரையும் காரணிகளாகின்றன.

இந்த நோயை குணப்படுத்த முடியாது என்ற மனநிலையில் இருப்பதை விட ஆரம்பத்தில் கண்டறிவதன் மூலம் குணப்படுத்தக் கூடிய வழிமுறைகள் இன்று உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply