மட்டுவில் வளர்மதி தொடர் கிண்ணம் நாவாந்துறை சென்மேரீஸ் வசம்!இறுதியில் கைகலப்பால் பரிசளிப்பு இரத்து

மட்டுவில் வளர்மதி சனசழூக நிலையத்தின் பொன்விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட அணிக்கு 7 பேர் கொண்ட தொடரின் இறுதியாட்டத்தில் யாழ் மாவட்டத்தின் பலம் பொருந்திய நாவாந்துறை சென்மேரீஸ் அணியை எதிர்த்து மற்றுமொரு பலம் பொருந்திய அணியான குருநகர் பாடுமீன் அணி மோதியது.
பெரும் திரளான ரசிகர்கள் பார்வையிட பரபரப்பாக நடைபெற்ற இறுதியாட்டத்தில் இரு அணிகளும் பலமான ஆட்டத்தினை வெளிப்படுத்தின. சென்மேரிஸ் வீரர் ஜக்சன் அடித்த பந்து எதிரணி வீரர் கோல் பரப்புக்குள் தடுக்க முற்பட்ட போது அவரினால் பந்து கோலக்கப்பட்டு முதலாவது கோல் ஒன் கோலாக பெறப்பட்டது. தொடந்து ஆட்டத்தின் போது பாடுமீன் அணிக்கு தண்ட உதை கிடைக்கப்பெற்றது. அது கோலாக்கப்பட்ட போது முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோலை பெற்று சமநிலையில் காணப்பட்டது.
தொடர்ந்து இரண்டாம் பாதி ஆட்டத்தில் சென்மேரீஸ் வீரர் நிரோ அணிக்கான இரண்டாவது கோலையும் ஜக்கனால் அணிக்கான ழூன்றவது கோலையும் அடித்து அணியின் வெற்றியினை உறுதி செய்தனர். போட்டி முடிவதற்து 2 நிமிடம் இருக்கையில் பாடுமீன் அணிக்கு மீண்டும் ஓரு தண்ட உதை வாய்ப்பு கிடைக்கபெற்றது. அதுவும் கோலாக்கபட இறுதியில் சென்மேரீஸ் அணி 3 – 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கிண்ணத்தினை தனதாக்கியது.
போட்டி முடிவடைந்து அடுத்த கணமே மைதானத்தில் கைகலப்பு ஏற்பட்டது. சென்மேரீஸ் வீரர்கள் எதிரணி ரசிகர்களால் தாக்கப்பட்டதை தொடர்ந்து மைதானத்தில் பதட்ட நிலை காணப்பட்டது. மைதானத்தில் இருந்த ஒரு சில பொலீசாரால் கைகலப்பினை கட்டப்பாட்டிற்குள் கொண்டுவர முடியாமல் போனதால் மேலதிக பொலிசார் மைதானத்திற்கு வரவழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்மேரீஸ் வீரர் ஒருவரும் பாடுமீன் வீரர் ஒருவரும் காயமடைந்ததுடன் மட்டுவில் புலம் பேர் கிராம உறவுகளின் பங்களிப்புடன் நடைபெற்ற பொன் விழா நிகழ்வுக்கு என புலம் பேர் உறவுகள் பல இப் போட்டியினை மைதானத்தில் புதிதாக திறந்துவைக்கப்பட்ட அரங்கில் இருந்து போட்டியினை பார்வையிட்டனர். அவர்களில் இரு சிறுவர்கள் இக் கைகலப்பில் சிக்கி படுகாயம் அடைந்ததடன் நிகழ்வினை புகைப்படம் பிடக்க வந்த புகைப்படப்பிடிப்பாளரும் பலமாக பலரால் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
11774270_10204318102372585_171101895_n 11791891_10204318102452587_1149937152_n 11798141_10204318102412586_260303123_n 11798195_10204318102612591_1885981427_n

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply