மட்டுவில் நடாத்தும் 7 பேர் கொண்ட தொடரின் இறுதியாட்டத்திற்கு பாடுமீன்மற்றும் சென்மேரீஸ் தகுதி

மட்டுவில் வளர்மதி விளையாட்டுக்கழகம் நடாத்தும் அணிக்கு 7 பேர் கொண்ட தொடரின் (20.07.2015) இடம்பெற்ற அரையிறுதியாட்டத்தில் ஊரெழு றோயல் அணியினை எதிர்த்து ஆடிய நாவாந்துறை சென்மேரீஸ் அணிக்கு ஆரம்பத்தில் நெருக்கடியினை கொடுத்த றோயல் அணி முதல் பாதி ஆட்டத்தில் 1-0 என்ற ரீதியில் முன்னிலை வகித்த போதிலும் இரண்டாம் பாதி ஆட்டத்தில் சென்மேரீஸ் அணியினர் ஆட்டத்தினை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருத்தமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் பாதியாட்டத்தில் சென்மேரீஸ் வீரர் நிதர்சன் தனது அணிக்காக 1வது கோலை பெற்றுகொடுத்ததுடன் தொடர்ந்து சற்று நேரத்தில் சென்மேரீஸ் முன்னனி வீரர் யூட் அற்புதமான ஒரு கோலை போட்டு சென்மேரீஸ் அணியின் வெற்றியினை உறுதி செய்தார்.

இறுதியில் சென்மேரீஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதிக்கு முன்னேறியது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த மற்றுமோர் அரையிறுதி ஆட்டத்தில் குருநகர் பாடுமீன் அணி வதிரி டைமன் அணியினை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதிக்கு முன்னேறியது.

நேற்றைய அரையிறுதியாட்டத்தில் கோல் அடித்த பாடுமீன் வீரர் தனது மேல் அங்கியினை கழற்றி தனது சந்தோசத்தினை வெளிப்படுத்திய போது போட்டி விதிமுறையிளை மீறியதற்காக மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. ஏற்கனவே ஒரு மஞ்சள் அட்டை ஆட்டத்தின் போது காட்டப்பட்டதால் உடனடியாக சிவப்பு அட்டை காட்டப்பட்டு நடுவரால் வெளியேற்றப்பட்டார்.

மிகச்சிறந்த வீரர் ஒழுங்கு விதியினை கடைபிடிக்க தவறியமையால் இறுதியாட்டத்தில் விளையாடும் தகுதியினை இழந்தார். இதேபோல் காலிறுதி ஆட்டத்தில் சென்மேரீஸ் பின்கள வீரரின் முறைகேடான ஆட்டத்தினால் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டதால் மீதி ஆட்டங்களில் ஆடும் வாய்ப்பினை இழந்தமை குறிப்பிடத்தக்கது. இன்றைய அரையிறுதி போட்டியில் கூட சென்மேரீஸ் வீரர் ஒருவரை எதிரணி ரசிகர்கள் கிண்டல் அடித்ததாகவும் விளையாட்டு நடைபெற்று கொண்டு இருக்கும் தருணத்தில் வாக்குவாதங்களில் ஈடுபட்ட தருணங்களையும் மைதானத்தில் காணக்கூடியதாக இருந்தமை அனைவராலும் அவதானிக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.

முன்னனி விளையாட்டு வீரர்கள் முறைகோடாகவும் போட்டி விதிகளை மீறி செயற்படும் நிலையினால் அவர்களின் திறனுக்கும் பாதிப்பு ஏற்படுவதுடன் அணிக்கும் பாதிப்பாக அமையக்கூடும். அணித்தலைவர்கள் அணி நிர்வாகம் தங்கள் வீரர்களின் திறனுடன் ஒழுக்காற்று நடவக்கையினையும் கருத்தில் கொண்டால் அணிக்கு நற்பேர் உருவாகுவதுடன் குழப்பங்கயையும் குறைக்கமுடியும் என்பது வெளிப்படை உண்மை.

22096_10204297630500801_4290678708621987178_n 10846085_10204297630540802_5963629363421485024_n

Kandasamy Veerasivaharan

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply