மரம் முறிந்து விழுந்து இரு வீடுகள் சேதம்

பாரிய மரமொன்று விழுந்ததால் இரண்டு வீடுகள் பாதிக்கப்பட்ட சம்பவம் ஹட்டன் – சின்னவேவாகலை தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

வீட்டுக்கு அருகில் பாரிய மரமொன்று முறிந்து விழக்கூடிய நிலைமையில் இருந்த காரணத்தினால் மரத்தை வெட்ட முயன்ற போது, அந்த மரம் வீட்டின் கூரையின் மீது சரிந்துள்ளது.

இதனால் வீட்டின் கூரையும் சுவர்களும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இதன் போது மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நேற்று மாலை சின்ன வேவாகலை தோட்டத்துக்கு விஜயம் செய்த மத்திய மாகாணசபை உறுப்பினர் ஸ்ரீதரன் பாதிப்புக்களைப் பார்வையிட்டதோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவது தொடர்பில் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் கவனத்துக்குக் கொண்டு வரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply