மருதங்கேணியில் போராடும் மக்களுக்குச் சமூக நீதிக்கான அமைப்பு ஆதரவு

மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு முன்னாள் காணாமலாக்கப்பட்ட உறவினருக்குப் பதில்கூறக்கோரி 150 நாட்களைக் கடந்து தொர்ச்சியாக இடம்பெறும் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அண்மையில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் நேரில் சென்று தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

அங்கு கருத்துத் தெரிவித்த சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் இணைச் செயலாளர்களில் ஒருவரான ச. தனுஜன் ´´மக்கள் தமது உறவுகளைப் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கக்கோரி மிகவும் அமைதியான முறையில் பல நாட்களாகத் தொடர்ச்சியாகப் போராடிவருகின்ற நிலையில், அவர்களை மைத்திரி – ரணில் அரசு அநாதரவாகக் கைவிட்டு விட்டு நல்லாட்சி, நல்லிணக்கம் என நாடகமாடிக்கொண்டிருக்கின்றது.

பிள்ளைகளைப் பறிகொடுத்த அன்னையர் இங்கு இழப்பதற்கு இனி எதுவுமற்றவர்களாய் வீதியில் விடப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான பதிலை இவ் அரசாங்கமும், மக்கள் பிரதிநிதிகளும் விரைவில் வழங்கவேண்டும்.´´ எனத் தெரிவித்தார்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply