மாணிக்ககல் அகழ்ந்த 5 பேர் கைது

பொகவந்தலாவ கெசல்கமுவ ஆற்றிற்கு அருகாமையில் டின்சின் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி இன்று (16) பொகவந்தலாவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்திய பல உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதாகவும், எதிர்வரும் 18ம் திகதி அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பொகவந்தலாவ டின்சின் மற்றும் பலாங்கொடை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply