மாநகர, நகர, பிரதேச சபைகள் திருத்தச் சட்டத்தில் இன்று கையெழுத்து

மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் கரு ஜெயசூரிய இன்று கையெழுத்திடவுள்ளார்.

அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் அண்மையில் குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதோடு, அது சில திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

இதற்கமைய, சபாநாயகர் இதில் கையெழுத்திட்டவுடன் குறித்த சட்ட மூலம் வர்த்தமானியில் வௌியிடப்படும்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply