மான் ஒன்று காயமுற்ற நிலையில் மீட்பு

தேயிலை மலையில் காயமுற்ற நிலையில் இருந்த மான் ஒன்றை பொகவந்தலாவை பொலிஸார் மீட்டுள்ளனர்

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சென்மேரிஸ் தோட்ட பகுதியிலே இன்று (19) குறித்த மான் மீட்கப்பட்டுள்ளது.

காயமுற்று தேயிலை மலையில் நடக்க முடியாத நிலையில் இருந்த மானை கண்ட தொழிலாளர்கள் உடனடியாக பொகாவந்தலாவை பொலிஸாருக்கு அறிவித்ததனர்.

மானை மீட்ட பொலிஸார் மிருக வைத்தியசாலையில் சிகிச்சையளிக்க வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply