”மாவட்டம் மாகாணம் தாண்டி சாதித்தது வரலாற்று வெற்றி!

12308968_10204940452290944_841552167_nநாவாந்துறை சென்மேரிஸ் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பிரிவு 02 உதை பந்து தொடரின் இறுதியாட்டம் (25.11.2015) பி.ப 3.00 மணியளவில் அரியாலை உதைபந்தாட்ட பயிற்ச்சி மைதானத்தில் ஆரம்பமானது. பலம் வாய்ந்த கொழும்பு யங்லெவின் நியூ ஸ்ரார் அணியும், யாழ் மாவட்டத்தின் முன்னணி கழகமாகிய நாவாந்துறை சென்மேரிஸ் அணியும் மோதின. ஆரம்பம் முதல் ஆட்டம் பரபரப்பாக அமைந்தாலும் போட்டியின் போது இரு அணி வீரர்களின் உபாதைகள் அதனால் ஏற்பட்ட போட்டி தாமதங்கள் போட்டியில் தொய்வு நிலை காணப்பட்டாலும் பெரும் திரளான ரசிகர்களின் ஆரவாரங்களுடன் போட்டி பரபரப்பாக அமைந்தது.

ஆட்ட நேரம் முடிவில் இரு அணிகலும் எவ்வித கோல் போடாது ஆட்டம் சமனிலையானது குறிப்பிடத்தக்கது. 90நிமிட அட்டத்தின் 80 வது நிமிடத்தில் சென்மேரீஸ் வீரர் ஜக்கனுக்கு முறையற்ற ஆட்டத்திற்காக 2வது மஞ்சள் அட்டை காட்டப்பட்டு நடுவரால் உடனே சமனான சிவப்பு அட்டை காட்டப்பட்டு .போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டதால் மிகுதியாட்டத்திற்கு சென்மெரிஸ் அணி 10 வீரர்களுடன் ஆடும் நிலைக்கு தள்ளப்பட்டது.

மேலதிக இரு பாதி நேரங்கள் வழங்கப்பட்டு முதல் பாதி மேலதிக நேரத்தில் கொழும்பு யங் லெவின் நியூ ஸ்ரார் அணி. தனக்கு கிடைத்த சந்தர்பத்தினை பயன்படுத்தி முதலாவது கோலினை பெற்று வெற்றியின் விளிம்புக்கு செல்லும் நேரத்தில் 2ம் பாதி மேலதிக நேரத்தின் இறுதி நிமிடத்தில் சென்மேரிஸ் வீரர் நிதர்சன் கோலினை போட்டு ஆட்டத்தினை சமப்படுத்தினார் போட்டி மேலதிக நேரத்திலும் 1-1 என்று சமனிலையானதால் சமனிலை தவிர்ப்பு முறை யில் சென்மேரிஸ் அணி  5-4 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பிரிவு 2 இன் 2015 ம் ஆண்டுக்கான கிண்ணத்தினை கைப்பற்றியது.

போட்டி முடிவடைய 2நிமிடங்கள் இருக்கும் போது சென்மேரிஸ் வீரர்கள் இருவர் மாற்றப்பட்டனர். உபாதைகாரணமாக பல மாதங்களாக போட்டிகளில் பங்கெடுக்காத சென்மெரிஸ் அணியின் முன்னனி வீரர் யுனிட்டன் மற்றொரு இளைய முன்னனி வீரர் ஜெனற் மாற்று வீரர்களாக களமிறங்க பெரும் திரள் ரசிகர்களும் அணியின் சகவீரர்களும் உற்சாகமடைந்ததடன் சமநிலை தவிர்ப்பு உதைக்கான வாய்ப்பினையும் எதிர்பார்திருந்ததை காணக்கூடியதாக இருந்ததும் இறுதியான சமநிலை தவிர்ப்பு உதைக்கான வெற்றிக் கோலினை ஜெனற் அடித்தமை சிறப்பாக அமைந்தமையும் குறிப்பிடத்தக்கது. பிரிவு 2 தொடரில் இரு போட்டிகளில் சென்மேரிஸ் அணி 10 வீரர்களுடன் போட்டியினை ஆடி முடித்தமை குறிப்பிடத்தக்கது.

12282999_10204940452370946_364487464_n 12312222_10204940452330945_2049419519_n

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply