மாஸ்கோவில் பயங்கர தீ விபத்து 3000 பேர் வெளியேற்றம்

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள சந்தை ஒன்றில் ஏற்பட்ட நெருப்பை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அணைத்தனர்.

மாஸ்கோவில் உள்ள, கட்டுமானப் பொருள்களுக்கான சந்தையில் நேற்று திடீரென பயங்கர தீப்பற்றியது. மரச்சாமான்கள் அதிகளவில் இருந்ததால், தீ வேகமாக பரவியதோடு, அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. அச்சந்தையினுள் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் 3000 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், கொழுந்து விட்டு எரிந்த தீயை ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர்.

நீண்ட போராட்டத்துக்குப் பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகிய போதும், உயிரிழப்புகள் ஏதும் நேரிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply