மியன்மார் அகதிகள் விவகாரம்: ஐவருக்கு பிணை

மியன்மார் அகதிகள் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐந்து சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, கடந்த 10ம் திகதி இந்த சம்பவம் குறித்து கைதுசெய்யப்பட்ட அக்மீமன தயாரத்ன தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், நேற்றையதினம் ஏழ்வர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதில் ஐவருக்கு பிணையில் செல்ல கல்கிசை நீதவான் அனுமதியளித்துள்ளார்.

ஏனைய இருவரையும் எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply