முகப்பருக்களை போக்கும் இயற்கையான வழிமுறைகள்

201701171346416651_pimples-main-reasons_SECVPF

பெண்களுக்கு முகப்பரு ஏற்பட்டுவிட்டால் முகத்தின் அழகு குன்றிவிடுகின்றது. இதனால் பெரும்பாலும் அழகுக்கலை நிலையங்களை நாடும் பெண்கள் இயற்கையாக அவற்றை மாற்றுவதற்கு முயல்வதில்லை.

உண்மையில் அழகக்கலை நிலையங்களுக்கு செல்வதன் மூலம், முகத்தில் பருக்கள்  இன்னமும் அதிகரிக்க தான் செய்யும். காரணம் முகத்தில் உள்ள பருக்களை நோகாமல் அகற்றுவதன் மூலம் தான் முகப்பருக்களோடு சேர்ந்து தளம்புகளும் மறையும். ஆனால் அழகுக்கலை மென்மை தன்மையை பேணுவது அரிது.

ஆகவே முகங்களில் உள்ள பருக்களை போக்குவதற்கு வீட்டிலேயே பின்வரும் வழிமுறைகளை செயற்படுத்துங்கள். நல்ல பலன் கிடைக்கம்.

1-வேப்பம் குருத்துடன் மஞ்சல் சேர்த்து அரைத்து பச்சை பயிற்றம் மாவுடன் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் ஊறவிட்டு மெல்லிய சுடு நீர் கொண்டு முகத்தை கழுவிவிடுங்கள்.
2.அதன் பின்னர் சுடு நீரில் ஆவி பிடித்துவிட்டு கொட்டன் துணியினால் முகத்தை ஒத்தனம் கொடுக்க வேண்டும்.
3.பின்னர் சந்தனம் குழைத்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
4.வெளியில் சென்று வீட்டுக்கு திரும்பியதும் சோப் அல்லது பேஸ்வோஸ் பாவிப்பதை தவிர்த்து கடலைமா பூசி 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவுதல் முகப்பரக்களை வரவிடாது.
5.அதிகளவில் முகத்தில் தளம்பு உள்ளவர்கள் வேப்பம் கருத்து துளசி இலை மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனை தினமும் செய்ய வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வர முகப்பரு இல்லாமல் போகும்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply