முன்னாள் பாதுகாப்பு செயலாளரிடம் 6 மணி நேர விசாரணை.

gotabhaya_rajapaksaமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஸவிடம், காவல்துறை நிதி மோசடி விசாரணை பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலம் ஒன்றை பதிவுசெய்துள்ளது. லங்கா ஹொஸ்பிடல் நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பிலேயே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

சுமார் 6 மணித்தியாலங்கள் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. முன்னதாக, 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற மிக் வானூர்தி கொள்வனவு தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றை பெற்று கொள்வதற்காக கடந்த 12 ஆம் திகதி வருகை தருமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அதற்காக அவர் பிறிதொரு நாளை கோரியிருந்தார். இதனையடுத்து, கோட்டபாய ராஜபக்ஷவை கைது செய்வதை தடுக்கும் வகையில் உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது.

எவ்வாறாயினும் மிக் வானூர்தி கொள்வனவு தொடர்பில் முன்னாள் வான்படை தளபதியான எயார் ஷீப் மார்சல் டொனல்ட் பேரேரவிடமும், ஏயார் ஷீப் மார்ஸல் ரோஸான் குணதிலக ஆகியோரிடமும் குற்ற விசாணை பிரிவு கடந்த தினத்தில் விசாரணைகளை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச இன்று முற்பகல் குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அவரது மனைவியான சசீ வீரவங்சவின் தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டுக்கள் போலியான ஆவணங்களை கையளித்து தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்கு மூலம் பெற்று கொள்வதற்காகவே அவர் அழைக்கப்பட்டிருந்தார். இதேவேளை, மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில இன்று குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்திற்கு சென்றிருந்தார். ஜனவரி 9 ஆம் திகதி அலரிமாளிகையில் இருந்து முன் எடுக்க திட்டமிட்டதாக கூறப்படும் சூழ்ச்சி தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராயவே அவர் அங்கு சென்றிருந்தார்.

இந்த முறைப்பாட்டை வெளிவிவகார அமைச்சர் மங்கல சமரவீர முன்வைத்திருந்தார்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply