முல்லேரியாவில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி

1849543694Gunnமுல்லேரியா, பேதியாகொடை பிரதேசத்தில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந் தெரியாத மூன்று நபர்கள் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலத்த காயங்களுடன் முல்லேரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

கிரிபத்கொடை, மாகோல, தேவாலய வீதி பிரதேசத்தில் வசிக்கும் 41 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்காக முல்லேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply