மோடியிடம் சம்மந்தர் கேட்டது என்ன? – கசிந்தது இன்னொரு விடயம்

mod

ஐ.தே.க – ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி இணைந்த தற்போதைய ஆட்சி தொடர்வதை உறுதி செய்ய இந்தியா உதவ வேண்டும் என்று,இந்திய பிரதமர் மோடியிடம் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் வேண்டுகோள் விடுத்திருந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய பிரதமர் கடந்த வாரம் இலங்கைக்கு வந்திருந்தபோதே இந்தக் கோரிக்கை எதிர்க் கட்சித் தலைவரினால் முன்வைக்கபட்டதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

இந்திய பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது, இரண்டு பிரதான கட்சிகளும் தங்களுக்கிடையிலான வேறுபாடுகளைச் சுருக்கி நாட்டு நலன்கருதி சிந்திக்காவிடில் குறித்த இலக்கை அடைய முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசாங்கத்திற்குள் ஒற்றுமையில்லாவிட்டால் நாம் முன்னோக்கி நகர முடியாது என்பதை நாம் மறக்கக்கூடாது. இந்த அரசாங்கத்தின் மீதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கமீதும் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். அவர்களின் பாதையில் தடைகள் உள்ளபோதும் முன்னோக்கி நகர்வார்கள் என்று நம்புகிறோம். இந்த நாட்டைப் பிரிக்காமல் அதிகாரப்பகிர்வை அவர்கள் வழங்குவார்கள் என்றும் நாம் நினைக்கிறோம் எனவும் எதிர்க் கட்சித் தலைவர் இந்தியப் பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மஹிந்த தலைமையிலான பொது எதிரணியனர், அரசாங்கத்தினை கைப்பற்றும் நோக்கி செயற்பட்டு வருகின்ற நிலையில், ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டால் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு தடை ஏற்பட்டு விடும் என்ற அச்சம் நிலவுகின்றமை தொடர்பிலும் இந்திய கவனம் செலுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளாதாக கூறப்படுகின்றது.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply