யாழிலிருந்து 02 வீரர்கள் சீனா பயணம்!

ஆசிய பாடசாலைகளுக்கிடையிலான 43வது சர்வதேச உதைபந்தாட்டப் போட்டியில் கலந்து கொள்வதற்காக இன்று சீனா (Mongolia) சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை  குழு 19 உதை பந்தாட்ட அணியில் யாழ் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மாணவர்கள் இருவர் இடம்பெற்றுள்ளனர்.

11934944_832776063508503_7173210306061738644_n

உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களான செபமாலை நாயகம் யூட்சுபன் மற்றும் அமலதாஸ் மதுஸ்ரன் ஆகியோரே இன்று பயணமாகின்றனர். இவர்கள் பாடசாலை மட்டப் போட்டிகளில் மட்டு மன்றி இலங்கையின் முதல் தர போட்டிகளான primer league division-1 போட்டிகளிலும் பங்கு பற்றி தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள இவர்கள் அவ்வணியின் முக்கிய வீரர்களாகவும் காணப்படுகின்றனர். எமது பிரதேசத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இவ் வீரர்கள் சிறப்பாக செயற்பட இவர்களை நாமும் வாழ்த்துவோம்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply