யாழில் அனலை எக்ஸ்பிறஸ் நிறுவனத்தினது 5வது செயற்றிட்டம்

கனடாவினை தலமையகமாக கொண்டியங்கும் அனலை எக்ஸ்பிறஸ் மீடியா நிறுவனத்தினது 05 வது சமூக செயற்றிட்டமாக யா- எழுவைதீவு முருகவேள் வித்தியாலய மாணவர்களினது அகில இலங்கை கல்விச்சுற்றுலாவிற்காக ரூபா 60,000/= வழங்கப்பட்டுள்ளது. யா/எழுவைதீவு முருகவேள் வித்தியாலயம் எமது நிறுவனத்திற்கு விடுத்த வேண்டுகோளினடிப்படையில் எமது நிறுவனத்தினால் இவ்வுதவியினை சமூக செயற்றிட்ட நிதியிலிருந்து வழங்கியிருந்தோம்.

தீவக வலய பாடசாகைளில் அதி உயர் கஷ்ட பிரதேசங்களில் ஒன்றாக எழுவைதீவு கிராமம் விளங்குகின்றது. பாடசாலை மாணவர்களுக்கான கல்வி மற்றும் பிற செயற்றிடங்கள், அகில இலங்கை கல்விச்சுற்றுலாவினை இது வரையும் இம்மாணவர்கள் மேற்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். வட பகுதியில் பாதிக்கப்பட்ட வலயங்களிலுள்ள மாணவர்களினது கல்வி மற்றும் பிற செயற்றிட்டங்களுக்கான நல்லுதவிகளினை சிறியளவில் வழங்கிவருகின்றமை எமது நிறுவனத்தின் சமூக செயற்றிட்டங்களில் குறிப்பிடத்தக்கனவாகும்.

V-4

V-1 V-2 V-5 V-6

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply