யாழ்ப்பாணத்தில் ஓராள்அரங்கத் திருவிழா 2015

நண்பர்களே யாழ்ப்பாணத்தில் பிரமாண்டமான ஏற்பாட்டில் நடைபெறுகின்ற ஓராள்அரங்கத் திருவிழா 2015 பங்கு கொள்ள உங்களை அழைப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

அரங்கத்துறையின் புதிய முயற்சிக்கு உங்கள் ஒத்துழைப்பு என்றும் துணை நிற்குமென்று நம்புகின்றோம். ஒவ்வொன்றும் பத்து நிமிடங்கள் கொண்ட தனியன்கள் நடிக்கின்ற 20 குறுநாடகங்களை ஒரே மேடையில் பார்க்கும் வாய்ப்பு அற்புதமானது.

பல்வகைத் தன்மை கொண்ட பல நாடகங்கள் ஒரு மேடையில் கிடைக்கின்ற போது அது அரங்க விருந்தாக அமையும். தனியன்கள் அற்புதமாக மேடையில் துலங்குகின்றார்கள். எதிர் வரும் ஏப்ரல் மாதம் 11ம் மற்றும் 12ம் திகதிகளில் மாலை 6.30 மணிக்கு மாநகர சபை முன்பாக உள்ள நல்லூர் குறுக்கு வீதியில் அமைந்துள்ள செயல் திறன் அரங்க இயக்கத்தின் திறந்த வெளி அரங்கில் இந்த விழா நடைபெறவுள்ளது.

12

யாழ்ப்பாண மாநகர சபையும், செயல் திறன் அரங்க இயக்கமும் இணைந்து இதனை ஏற்பாடு செய்கின்றார்கள். வாருங்கள் வந்து பாருங்கள்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply