யாழ்ப்பாணம் கடலால் மூழ்கும் அபாயமாம் – நிபுணர்கள் கருத்து

யாழ்ப்பாணம் கடலால் மூழ்கும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளதாக வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

உலக வெப்பமயமாதல் விளைவாக காலநிலையில் ஏற்படும் மாற்றங்களால் குறிப்பாக யாழ்ப்பாணம் கடலால் மூழ்கும் அபாயம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஐங்கரநேசன்,

2004 ஆண்டில் வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளை சுனாமி தாக்கியதால் சுமார் ஒரு மணித் தியாலத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

சுனாமியால் உடமைகள், உயிர்கள் என பல அழிவடைந்தன. இந்த அதிர்ச்சியிலிருந்து இன்னமும் நாம் மீளவில்லை. எனவே 26 ஆம் திகதியை நாம் ‘பேரழிவு கட்டுபாடு நாள்” என பிரகடனம் செய்துள்ளோம்.

இதேவேளை இலங்கையில் எதிர்காலத்தில் காலநிலையில் பல மாற்றங்கள் ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இயற்கை பேரழிவுகள் என்பது புதிதல்ல. எனினும் காலநிலையில் ஏற்படும் மாற்றங்களால் பூமியிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

மேலும் உலகில் உள்ள எரிமலைகள் பல வெடிக்க ஆரம்பித்துள்ளன. இதனால் பூமியில் வெப்பநிலை அதிகரித்துள்ள அதிக மழை பெய்யும் நிலையும் ஏற்பட்டு வெள்ளமும் ஏற்படுகின்றது. இந்த நிலைமையே அண்மையில் சென்னையில் ஏற்பட்டிருந்தது.

எனவே இயற்கை பேரழிவுகளிருந்து எம்மை பாதுகாத்துகொள்ள இயற்கைக்கு கேடு விளைவிக்காமல் இருப்பதோடு இது தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

Ayngaranesan

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply