யாழ் மண்ணில் மதீசனின் அதிரடி இசையில் ஆங்கிலப்பாடல்!

யாழ் மண்ணிலிருந்து உலக சுகாதார தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வூட்டும் ஆங்கிலப்பாடல் திரு- மதீசன் தனபாலசிங்கம் அவர்களுடைய 60வது பாடலாக இந்த உலக சுற்றுச் சூழல் தினத்தில் உலக மொழியான ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கிறது. இந்த குப்பைப்பாட்டு. உலக சுத்தத்தை தேடும் இளைஞர்களாக இந்தப் பாடல் குழுவினர் அனைத்து இளைஞர்களையும் உலக சுத்தத்துக்கு அழைக்கிறார்கள்.

13346496_1095478803863653_464978979402490675_n

ஈழத்தில் இருந்து உலகத்தரத்துக்கு தயாராகியிருக்கிறது பாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாடல் வரிகளை விவேக் எழுத, மதீசன் இசையமைத்து பாடுகின்றார்.

மேலும் சிவராஜ், திசாங்கன், கிருஷ்ணா, உஷாந்த், கதிர், மகிழ்நன், கபில் , நிலக்சன், அருண், கிரி ஆகியோரது பங்களிப்பும் இப்பாடலில் உள்ளது. இந்தக்குழு முயற்சியில் பங்களிப்பு செய்த அனைத்து இளைஞர்களுக்கும் எமது இணையம் சார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply