யேசுவிடம் கற்ற பெண் சீடர்கள்

Franceschini,_Giacomo_-_Gesù_e_la_Samaritana_al_pozzo

ஏட்டுக் கல்வி இல்லாத அந்தக் காலத்தில் கல்வியானது ‘குரு – சீடர்’ உறவின் அடிப்படையில் இருந்தது. சமய குருவின் ஆசிரமத்தில் சீடர்கள் தங்கியிருந்து சமயக் கோட்பாடுகளையும் இறைவனைப் பற்றிய செய்திகளையும் கற்றுக்கொண்டனர்.

இயேசுவானவர் தன்னுடைய இப்பூலோகப் பணிக்காலத்தில் சீடர்களைத் தெரிந்து கொண்டு அவர்களுக்குப் போதனைகளை நேரடியாகவும் கதைகள் உவமைகள் செய்முறை பயிற்சி மூலமாகவும் கூறி வந்தார். அவ்வாறு  யேசுநாதர் கற்பித்த பெண் சீடர்கள் பற்றி அறிவீர்களா?

நற்செய்தி நூல்களில் வரும் பெண்களின் சீடத்துவம் ஆக்கப்பூர்வமான முன்மாதிரியானது.

பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களிலிருந்தும் குணமான பெண்கள் சிலரும் ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகத்தான மரியா, யோவன்னா, சூசன் மேலும் பல பெண்களும் இயேசுவோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்து வந்தார்களாம். பெயர் அறிவிக்கப்படாத பெண் ஒருவர் இயேசுவை விலை உயர்ந்த நறுமணத் தைலத்தால் பூசித்தார்.

அவர் கலிலேயாவிலிருந்த போது அவருக்குப் பின் சென்று ஊழியம் செய்துவந்த மகதலேனா மரியாளும் சலோமே என்பவளும் அவருடனே கூட வந்திருந்த அநேகஸ்திரீகளும் அவர்களோடே இருந்தார்கள்’ என மாற்கு நற்செய்தியின் பிற்பகுதியில் கூறப்படுகிறது.

இயேசு கைது செய்யப்பட்டதை அறிந்ததும் பன்னிரு சீடர்களும் கோழைகளைப் போல தப்பி ஓடிவிட்டனர்.  ஆனால் இயேசுவின் பின்சென்ற பெண்களோ அவர் சிலுவையில் அறையப்பட்டுத் துன்புற்ற வேளையிலும் கூட அவரோடு இருந்தனர். அவர் இறப்பதை அவர்கள் கண்களால் கண்டனர். அவரைச் சிலுவையிலிருந்து இறக்கிய போதும் அவரோடு இருந்தனர். அவரை அடக்கம் செய்த இடத்தையும் பார்த்தனர். வாரத்தின் முதல் நாளன்று இயேசு அடக்கம் செய்யப்பட்டிருந்த கல்லறையானது வெறுமையாய் இருந்ததையும் பெண்கள் கண்டனர்.

பெண் சீடருள் புகழ் பெற்றவர் மகதலேனா மரியாள். இறந்த இயேசு உயிர் பெற்றுவிட்டார் என்ற உண்மைக்கு இவரே முதல் சான்றாகும்.

கிறிஸ்தவ வாழ்வில் துன்பத்திற்கும் ஒரு முக்கிய இடமுண்டு. இயேசுவே துன்பங்களுக்கு ஆளானார். அதுபோலவே இயேசுவின் பின்சென்ற பெண் சீடர்களும் துன்பங்களுக்கு நடுவிலும் இறுதிவரை நிலைத்து நின்றனர். இது யேசு கற்பித்த பெண் சீடர்களின் மகத்துவம்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply