யோஷித ராஜபக்‌ஷ சற்றுமுன்னர் கைது

1465722472Sonமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்‌ஷவிடம் சற்றுமுன்னர் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக இன்று காலை கடற்படைத் தலைமையகத்தில் அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

சிஎஸ்என் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் நிதி மோசடிகள் குறித்தே அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைகளின் பின்னரே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்‌ஷவை கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply