ரஜினியை நம்பி முதலீடு செய்தது வீணா போச்சு – ரஜினி ரசிகரின் அதிர்ச்சி பேட்டி

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக சூப்பர்ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். இவரை சுற்றி பல வருடங்களாக அரசியல் சாயம் சுற்றி வருகிறது.

சமீபத்தில் ரசிகர்களை சந்தித்து வரும் ரஜினிகாந்த் தனது ரசிகர்களிடம் பேசுகையில், சூழ்நிலையால் அரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிக்கும் நோக்கில் இருப்பவர்களை அருகில் வைத்துக்கொள்ள மாட்டேன் என்றார்.

இதுகுறித்து பல கருத்துக்கள் சமூகவலைதளங்களிலும் உலாவரும் நிலையில், ரஜினி ரசிகர் ஒருவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், ரஜினி அரசியலுக்கு வருவார் என நம்பித்தான் இத்தனை வருடம் போஸ்டர், கட்அவுட், பாலாபிஷேகம் என நாங்கள் முதலீடு செய்தோம்.

கடைசியில் ரஜினி இப்படிப் பேசியது எங்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது என்று கூறியுள்ளார். இந்த ரசிகரின் கருத்து மற்ற ரசிகர்கள் இதற்காகத்தான் ரஜினியின் ரசிகர்களாக இருக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்பி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 https://youtu.be/Q5R90W4PrT0

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply