ரியோ ஒலிம்பிக்கில் அமெரிக்கா முதல் தங்கத்தை வென்றது

Olympics-Virginiaரியோ ஒலிம்பிக்கில் அமெரிக்க வீராங்கனை துப்பாக்கி சுடு போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் அமெரிக்க முதல் தங்கத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது.

ரியோ ஒலிம்பிக்கில் அமெரிக்கா முதல் தங்கத்தை வென்றது: 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் அசத்தல்
ரியோ:

தென்அமெரிக்காவில் உள்ள பிரேசில் நாட்டின் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நேற்று கோலாகல கலை நிகழ்ச்சியுடன் ‘ரியோ ஒலிம்பிக்- 2016’ தொடங்கியது.

இன்று பெண்களுக்கான 10 மீ்ட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. தகுதிச் சுற்றின் முடிவில் 8 வீராங்கனைகள் இறுதி சுற்றுக்கு தகுதிப் பெற்றார்கள்.

இறுதிச் சுற்றில் அமெரிக்கா மற்றும் சீனா வீராங்கனைகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. இறுதியில் அமெரிக்க வீராங்கனை விர்ஜினியா த்ராஷெர் 108.0 புள்ளிகள் பெற்று தங்க பதக்கம் வென்றார். சீனா வீராங்கனை லீ டு 207.0 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். மற்றொரு சீன வீராங்கனை சிலிங் யீ 185.4 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார்.

தகுதிச் சுற்றில் சீன வீராங்கன் லீ டு முதல் இடம் பிடித்திருந்தார். த்ராஷெர் 6-வது இடமும், சிலிங் யீ 8-வது இடமும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply