ரொறொன்ரோவில் இத் தகவல் தெரிந்தால் $50K வெகுமதி!

rewரொறொன்ரோ-கர்ப்பினி பெண் ஒருவரை பயங்கரமான முறையில் துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் குறித்த தகவல் தெரிவிப்பவர்களிற்கு 50,000டொலர்கள் வெகுமதி வழங்கப்படும் என ரொறொன்ரோ பொலிசார் அறிவித்துள்ளனர்.

கடந்த வருடம் ரொறொன்ரோ ஜேம்சன்ரவுனில் இக்கொலை நடந்தது. மே 15, 2016ல் கன்டிஸ் றோசெலி பொப் எனப்படும் 33-வயது பெண் கூடைப்பந்தாட்டம் பார்த்துவிட்டு வேறு மூவருடன் வாகனமொன்றில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

இச்சமயத்தில் இவருடன் பயணித்த மற்றவர்கள் பயணி ஒருவரை ஜோன் காலன்ட் புளுவாட் மற்றும் ஜேம்ஸ்ரவுன் பகுதியில் இறக்க சென்ற போது சந்தேக நபர் ஒருவர் இவர்களது காரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்ய ஆரம்பித்தார்.

அச்சமயத்தில் ஐந்து மாத கர்ப்பினியாக இருந்து பொப் காரின் பின் இருக்கையில் இருந்தார்-காரில் அச்சமயம் இருந்தது இவர் மட்டும். துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்தார்.

வைத்தியசாலைக்கு கொண்டு விரையப்பட்ட இவர் அங்கு இறந்துவிட்டார். அவசர’ சி’ பிரிவு மூலம் குழந்தை பிரசவிக்கப்பட்டது. ஆனால் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குழந்தையும் ஒரு மாதத்தால் இறந்துவிட்டது.

சந்தேக நபர் அடையாளம் கண்டுபிடிக்கப்படும் போது அவர் மீது இரு மரணங்களிற்கான குற்றம் சுமத்தப்படும் என பொலிசார் முன்னரே அறிவித்திருந்தனர்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply