ரொறொன்ரோவில் கண்காணிப்பு ஊசி தளங்கள் ஆரம்பம்!

அங்கீகரிக்கப்பட்ட மூன்று கண்காணிப்பு ஊசி தளங்களில் ஒன்றிற்கான கட்டுமான பணி ரொறொன்ரோவில் இன்று ஆரம்பிக்கப்படுகின்றது.

சட்ட விரோதமான போதை மருந்துகளை- பொதுவாக ஒபியேட்ஸ் அல்லது கொககெயின்-போன்றவைகளை உட்செலுத்துவதற்கு கைது செய்யப்படுவோமோ என்ற பயமின்றி பயிற்றப்பட்ட சுகாதார பராமரிப்பாளர்களின் உதவியுடன் பெற்று கொள்ள வசதியானவை இத்தளங்கள்.

இவற்றின் மூலம் பாதுகாப்பான ஊசிகளை பாவித்தல் மற்றும் தேவைக்கு அதிகமாகஏற்றுதல் போன்றனவற்றை தடுக்கவே இந்நடவடிக்கை என அறியப்படுகின்றது.

இது போன்ற 90-ற்கும் மேற்பட்ட தளங்கள் உலகளாவிய ரீதியில்-ஒன்பது ஐரோப்பிய நாடுகளிலும், அவுஸ்ரேலியாவில் ஒன்றும், வன்கூவரில் இரண்டும் இயங்குகின்றன.

அங்கீகரிக்கப்பட்ட மூன்று தளங்களில் ஒன்று ரொறொன்ரோ டன்டாஸ் வீதிக்கருகில் விக்டோரியா வீதியில் அமைந்துள்ள பொது சுகாதார கட்டிடத்தின் உள்ளே இன்று ஆரம்பமாகின்றது.

ரொறொன்ரோ நகர சபை கடந்த கோடை காலத்தில் மூன்று இடங்களில் கண்காணிப்பு ஊசி தளங்களை அமைக்க ஒப்புதல் அளித்தது.

மற்றய இரு தளங்களும் முறையே குயின் மேற்கு-மத்தி ரொறொன்ரோ சமூக சுகாதார மையத்திலும் றெக்ஸ்டேல் தெற்கு சமூக சுகாதார மையத்திலும் ஆரம்பிக்க படவுள்ளது.

இத்தளங்களை அமைப்பதற்கு தளமொன்றிற்கு கிட்டத்தட்ட 100,000 முதல் 150,000 டொலர்கள் வரை செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஒரு இரண்டு வார காலப்பகுதியில் ரொறொன்ரோவில் குறைந்தது ஆறு மரணங்கள் அளவுக்கதிகமான போதை மருந்து உட்கொண்டதால் ஏற்பட்டுள்ளதென கண்டறியப்பட்டது.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply