ரொறொன்ரோ பெரும்பாகத்தை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள ;அளவிற்கதிகமான மருந்து!

இக்கோடைகாலத்தில் ரொறொன்ரோவில் அளவிற்கதிக வென்ரநில் கலந்த ஹெரோயின் பல மரணங்களை ஏற்படுத்தியமை பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக அறியப்படுகின்றது.

டர்ஹாம் பகுதியில் ஒரே இரவில் மூன்று மனிதர்கள் மரணமடைந்துள்ளனர்.இவர்களின் மரணத்திற்கு வென்ரநில் கலந்த ஹெரோயின் காரணமாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகப்படுகின்றனர்.

ஒரே இரவில் ஏஜக்ஸ், வல்பி கோட் என்ற இடத்தில் இருவர் இறந்திருக்க கண்டுபிடித்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மற்றொருவர் கோர்ட்டிஷ் என்ற இடத்தில் வீடொன்றில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

நச்சுயியல் சோதனைகள் நடாத்தப்படவில்லை எனினும் மூன்று மரணங்களிற்கும் அளவிற்கதிகமான -வென்ரநில் சம்பந்தமுடைய மருந்து காரணமாகலாம் என பொலிசார் நம்புகின்றனர்.

ஒரு விதமான ஹெரோயின் வாங்குவதாக நினைத்து மனிதர்கள் வாங்குகின்றனர் எனினும் சில நேரங்களில் அவை வென்ரநில் கலந்தவைகளாக இருக்கலாம் இவை மிகவும் கடுமையானவை அத்துடன் மரணத்தை ஏற்படுத்தலாம் எனவும் கூறப்படுகின்றது.

அளவு மீறிய போதை மருந்து குறித்து டர்ஹாம் மற்றும் ரொறொன்ரோ பெரும்பாக பொலிசார் கவலை கொண்டுள்ளனர்.

அளவிற்கதிக மருந்து பாதிப்பை தடுக்கும் சாதனத்தை முன்னணி அதிகாரிகள் கொண்டிருப்பதால் போதைகலந்த மருந்தின் பாதிப்பை தடுக்கலாம் என கூறப்படுகின்றது.

அளவுக்கதிக ஆரம்ப கட்டத்தில் மட்டுமே இந்த நடவடிக்கை செயல் படுத்தபட வேண்டும்.

இந்த மரணங்கள் மட்டுமன்றி யோர்க் பிராந்தியத்தில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாஹனில் 22 வயதுடைய மனிதரொருவரும் 26-வயதுடைய பெண் ஒருவரும் சந்தேகப்பட்ட அளவிற்கதிமான மருந்தினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இருவரும் அதிகாலை 4-மணியளவில் வீடொன்றின் வெளியே ஒருவர் தரையில் விழுந்து கிடந்த நிலையிலும் மற்றவர் கார் ஒன்றின் பொனட்டின் மேல் கிடந்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

யூலை மாத இறுதியில் ஒரு நான்கு நாட்கள் அவகாசத்தில் ரொறொன்ரோவில் மட்டும் 24 அளவிற்கதிகமான மருந்து சம்பவம் இவற்றில் நான்கு மரணத்திற்குரியதாகவும் இருந்துள்ளது.

பின்னர் கடந்த வாரம் இரு பெண்கள் சந்தேகத்திற்கிடமான ஓவடோசினால் எற்றோபிக்கோ தொடர்மாடிக்கட்டிட மொன்றில் இறந்து கிடக்க கண்டு பிடிக்கப்பட்டனர்.அடுத்து மனிதனொருவர் டவுன்ரவுனில் கொன்டமேனியம் கட்டிடமொன்றின் உயர்த்திக்குள் உருக்குலைந்து விழுந்த பின்னர் இறந்துள்ளார்.

இச்சம்பவங்களின் எதிரொலியாக ரொறொன்ரோ அதிகாரிகள் மூன்று பாதுகாப்பான ஊசி ஏற்றும் மையங்களை நிறுவும் முயற்சியை துரிதப்படுத்த எண்ணியுள்ளதாக அறியப்படுகின்றது.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply