லொறியும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

2137352761Bodyஅவிஸ்ஸாவளை – கண்டி பிரதான வீதியில் பிங்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

லொறி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமைடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி பிங்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

அட்டால பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்றைய தினம் கேகாலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply