வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா!

vcc-prize-day2014-001யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா கடந்த சனிக்கிழமை (04-07-2015) அன்று கல்லூரியின் தலைவர் திருந.சபாரத்தினசிங்கி அவர்களின் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக உயர்திரு சு.திருஞானசம்பந்தர் அவர்களும், சிறப்பு விருந்தினராக காரைநகர் கல்விக் கோட்டத்தின் பணிப்பாளர் உயர்திரு பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

நினைவுப் பேருரையினை கல்லூரியின் பழைய மாணவியும், சுற்றாடல் உத்தியோகத்தருமான திருமதி ஆரணி மயூரன் அவர்கள் வழங்கினார். பாடசாலை மட்டத்திலிருந்து தேசிய மட்டம் வரை சாதனை படைத்த அத்தனை மாணவர்களும் இவ்விழாவின் போது கௌரவிக்கப்பட்டனர்.

விழாவின் இறுதியில் சிறப்பு நிகழ்வாக எம் பாரம்பரிய கலை வடிவங்களிலே ஒன்றான சிந்துநடையில் அமைந்த காத்தவராயன் கூத்தும் பாடசாலை மாணவிகளால் சிறப்பாக ஆற்றுகை செய்யப்பட்டிருந்தது. அன்றைய தினம் உலகத் தமிழரின் தனித்துவக் குரலாய் விளங்கும் அனலை ஊடக வலையமைப்பைச் சேர்ந்த அனலை FM மற்றும் சரஸ் TV என்பன இணைந்து விழாவினை நேரடி ஒலி,ஒளிபரப்புச் செய்திருந்தமை விசேட அம்சமாகும்.

a1

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply