வளம் பெற வைக்கும் முருகனின் விரதம்

3

முருகப்பெருமான் வைகாசி விசாகம் அன்று அவதாரம் செய்த தினம் ஆகும் . உயிர்களுக்கு நேரும் இன்னல்களை நீக்கும் பொருட்டு சிவன் ஆறுமுகங்களாக தோன்றினார்.

விசாக நட்சத்திரத்தில் வரும் இந்த சிறப்பு நாளில் திருமுருகன் வீற்றிருக்கின்ற கோயில்களிலும், அறுபடை வீடுகளிலும் விசாக வழிபாடு சிறப்பாக நடைபெறும்.

இந்நாளில் விரதமிருந்து முருகனை வழிபட்டால் வாழ்வில் வளம் பெறலாம். புத்தர் அவதரித்ததும் வைகாசி விசாகத்தில் தான்.

புத்த பூர்ணிமா என பவுத்தர் இதனைக் கொண்டாடுவர். இந்நன்னாளில் நம்மாழ்வார் அவதரித்தருளினார்.

தெற்கு திசையின் திக்பாலகரான யமதர்ம இராஜனுக்குரியது வைகாசி விசாகமே.

குருவின் நட்சத்திரம் விசாகம். இட்சுவாகு வம்சத்திற்குரிய நட்சத்திரமாகக் கருதப்பட்டதால் விசாகம் அமைந்துள்ள கோள் நிலையில் ராம -ராவண யுத்தம் நடந்ததாக ஸ்ரீமத் இராமாயணம் கூறுகின்றது.

அகோபிலம் எனப்படும் சிம்மாலத்து நரசிம்ம மூர்த்திக்கு வருடம் முழுதும் சாத்தப்பட்டிருக்கும் சந்தனக் காப்பினை இந்நாளிலேயே களைவார்கள்.

வைகாசி விசாகத்திலே காஞ்சி வரதராஜப் பெருமாளுக்கு கருட சேவை நடைபெறும். குடந்தை ஆதிகும் பேசுவரர் திருக்கல்யாணம் வைகாசி விசாகத்திலே நடைபெறும்.

திருவேட்களத்தில் அர்ச்சுனனுக்கு பரமன் பாசுபதாஸ்திரம் வழங்கிய விழா கொண்டாடப் பெறுவது வைகாசி விசாகத்தன்று தான்.

கன்னியாகுமரி அம்மனுக்கு ஆராட்டு விழா வைகாசி விசாகத்திலே தான். திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் வைகாசி விசாகத்திலே சித்தி அடைந்ததால் அவரது குருபூஜை நடைபெறுகின்றது.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply