வழிப் பிள்ளையார் ஆலயத்தில் உண்டியல் கொள்ளை

டயகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டயகம வெஸ்ட் 3 ம் பிரிவு தோட்டத்தில் உள்ள வழிப் பிள்ளையார் ஆலயம் 23 ம் திகதி இரவு இனம்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு உண்டியல் திருடப்பட்டுள்ளது.

இதே தோட்டத்தில் உள்ள சலூன் கதவுகள் உடைக்கப்பட்டு 20 ஆயிரம் ரூபாய் பெருமதியான சிகை அலங்காரம் செய்யும் மெஷின்கள் திருடப்பட்டுள்ளதாக கடை உரிமையாளர் டயகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஆலயத்தில் திருடப்பட்ட உண்டியலிருந்து பணத்தினை பெற்றுக்கொண்டு உண்டியலை தேயிலை மலையில் விட்டு சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணையை டயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை எவரும் கைதுசெய்ப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply