வாய்ப்பு வாங்கிக்கொடுத்த என்னை பழிவாங்கிவிட்டார் கஞ்சா கருப்பு: பரணி

பெண்களுக்கு பாதுகாப்பில்லை என வெளியேற்றப்பட்ட பரணி வெற்றியாளர் - கமல்ஹாசன்நடிகர் பரணி சென்ற வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சி நடக்கும் வீட்டில் இருந்து சுவர் ஏறி குதித்து தப்ப முயன்றார், அதனால் அவரை வீட்டில் இருந்து வெளியேற்றிவிட்டனர்.

அதற்கு முன் கஞ்சா கருப்பு மற்றும் பரணி இடையே ஒரு பெரிய சண்டையே நடந்தது. அப்போது தீயணைப்பு சிலிண்டரை எடுத்து அடிக்க ஓடினார் கஞ்சா கருப்பு.

இன்று நிகழ்ச்சிக்கு வந்த கமல்ஹாசன் பரணியை மேடைக்கு அழைத்து பேசினார். அந்த சண்டை பற்றி கேட்டதற்கு, “என்ன காரணம் என எனக்கு தெரியவில்லை. அவரிடம் தான் கேட்கவேண்டும். நான் ஹீரோவாக நடித்த ஒரு படத்தில், டைரக்டர் வேறு ஒருவரை காமெடியனாக போட நினைத்தார், ஆனால் கஞ்சா கருப்புக்காக பேசி நான் வாய்ப்பு வாங்கி கொடுத்தேன். ஆனால் அவரோ பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்னை இப்படி செய்துவிட்டார்” என வருத்தத்துடன் சொன்னார் பரணி.

மேலும், “குடும்பத்தை பிரிந்து பணம் ஈட்ட வெளிநாட்டில் கஷ்டப்படும் சாதாரண ஒருவன் படும் கஷ்டத்தை தான் பிக் பாஸ் வீட்டில் அனுபவித்ததாக” கூறினார்.

அப்போது மக்கள் ஓட்டளித்த நீங்கள் தானே வின்னர் பிறகு ஏன் வெளியேறினீர்கள் என்று கமல் கேட்டார்.

“நான் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் சொன்னதால் தான் வீட்டை விட்டு வெளியேற முடிவெடுத்தேன்” என சுவர் ஏறி குதித்தது பற்றி பரணி கூறினார்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply