வாழ்வில் அனைத்து வளமும் பெறுகுவதற்கு செய்யவேண்டியவை

Lakshmi Kubera

வாழ்வில் அனைத்து வளமும் பெற்று குடும்பத்தில் செல்வமும், மகிழ்ச்சியும் பெருகுவதற்கு என்னென்ன வழிபாடுகளை செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

பலன்கள் தரும் ஆன்மிக வழிபாடுகள்

01. வீட்டில் விரதமிருந்து சுமங்கலி பூஜை செய்தால், சௌபாக்கியம் கிடைக்கும். இல்லத்தில் சுப காரியங்கள் நடைபெறும்.

02. வீட்டில் துளசி வளர்த்தால் செல்வம் பெருகும், பாவங்கள் நீங்கும்.

03. சான்றோர்களை உபசரித்து ஆசிபெற்றால், ஆயுள் விருத்தி உண்டாகும், சகல தோஷங்களும் விலகும்.

04. விருந்தினரை மனம் நோகாமல் உபசரித்தால், புண்ணியம் சேரும்.

05. கோயில் திருப்பணிக்கு உதவினால், மறுபிறப்பு இல்லாத நிலை உருவாகும், உறவினர்களின் பகை மாறும்.

06. கோயிலில் உழவாரப் பணிசெய்தால், வாழ்க்கையில் வளர்ச்சி கூடும், காரிய தடை விலகும்.

07. வீட்டில் மற்றும் ஆலயத்தில் தெய்வீக மரம் வைத்தால், லட்சுமி கடாட்சம் கிடைக்கும், மழை வளமும் பெருகும்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply