விபத்தில் இளைஞன் பலி – சிறுவன் காயம்

267552408Untitled-1மட்டக்களப்பு – கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவர் ஐயங்கேனி – ஜின்னா வீதியைச் சேர்ந்த 24 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

ஆரையம்பதி பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து, படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மரணமடைந்துள்ளார்.

இவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த 15 சிறுவன் கை உடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் பிரிவு மேற்கொண்டு வருகின்றது.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply