விபூதி எப்படி உருவாகியது?

maxresdefault6

விபூதி தோன்றிய கதை உங்களுக்குத் தெரியுமா?

பர்னாதன் என்பவன் உணவையும் தண்ணீரையும் மறந்தவனாக சிவனை நினைத்துக் கடும் தவம் புரிந்தான். ஒருநாள் அவனுக்குக் கடுமையான பசி எடுத்தது. தவம் கலைந்தது. கண்ணை திறந்தான். அப்போது அவனைச் சுற்றிச் சிங்கங்களும் புலிகளும் பறவைகளும் என பல வன உயிரினங்கள் யாவும் காவலுக்கு இருந்தன. பசியால் முகம் வாடி இருந்தவனைக் கண்ட பறவைகள் பழங்களைப் பறித்து பர்னாதன் முன் வைத்தது.

இது ஈனின் கருனையே என்று மகிழ்ந்து பசி தீரக் கனிகளைச் சாப்பிட்டு முடித்து மீண்டும் தவத்தை தொடர்ந்தான். இப்படியே பல வருடங்கள் கடந்தோடின. தவத்தை முடித்துக் கொண்டு சிவவழிபாட்டைத் தொடங்கினான். ஒருநாள் தர்பைப்புல்லை அறுக்கும் போது அவன் கையில் கத்திபட்டு ரத்தம் கொட்டியது.

ஆனால் அவனுக்கோ எந்த பதற்றமும் இல்லை. இருப்பினும், அவன் முன்பு சிவபெருமான் வேடன் உருவில் தோன்றினார். பர்னாதன் கையைப் பிடித்துப் பார்த்தார். ரத்தம் சொட்டிய இடத்தில் விபூதி கொட்ட ஆரம்பித்தது. வந்தது இறைவன் என்பதை அறிந்தான்.

‘ரத்தத்தை நிறுத்திச் சாம்பலைக் கொட்ட செய்த தாங்கள் நான் வணங்கும் இறைவன் சிவபெருமான் என்பதை அறிவேன். இந்த அடியேனுக்குத் தங்கள் சுயஉருவத்தை காணும் பாக்கியம் இல்லையா?’ என்று வேண்டினான் பர்னாதன்.

ஈசன் தன் சுயரூபத்தில் காட்சி கொடுத்தார். ‘உனக்காகவே இந்தச் சாம்பலை உருவாக்கினேன். அதனால் இந்தச் சாம்பல் இன்று முதல் விபூதி என்று அழைக்கப்படும். உன் நல்தவத்தால் விபூதி உருவானது. அக்னியை எதுவும் நெருங்க முடியாததைப் போல விபூதியைப் பூசி அணிந்து கொள்பவர்களின் அருகில் துஷ்டசக்திகள் எதுவும் நெருங்காது. விபூதி என் ரூபம். அதற்கு நீயும் துணையாக இருந்து வா’ என்று ஆசி வழங்கினார் சிவபெருமான்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply