விலங்குகளை பரிசோதிக்க வருகிறது புதிய சிப்

மனிதர்கள் நோய் வாய்ப்படும்போது அவர்களை பரிசோதிப்பது சற்று லேசான காரியம் ஆகும்.

இதற்கு காரணம் தமக்கு ஏற்பட்டுள்ள நோய்கள் தொடர்பில் வாய் மூலமாக கருத்துக்களை தெரிவிக்க முடியும்.

ஆனால் ஐந்தறிவு படைத்த விலங்குகளில் இது சாத்தியம் இல்லை.

கடுமையான பரிசோதனைகளின் அடிப்படையிலேயே அவற்றின் நோயைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.

இப் பிரச்சினைக்கு தீர்வாக சிறிய ரக சிப் ஒன்றினை பொருத்தி விலங்குகளில் ஏற்படும் மாற்றங்களை அவதானிப்பதன் ஊடாக அவற்றில் ஏற்படும் நோய்களை அறிந்துகொள்ள முடியும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இதற்காக அவர்கள் விசேடமான சிப் ஒன்றினை வடிவமைத்துள்ளதுடன், இதனை விலங்குகளில் பயன்படுத்துவற்கான அனுமதியை Food and Drug Administration நிறுவனத்திடம் கேட்டிருந்தனர்.

குறித்த சிப்பின் செயற்பாடுகளை ஆராய்ந்து பார்த்த அவர்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.

பெருவிரல் நுனிப் பகுதியின் அளவே உடைய குறித்த சிப் ஆனது தனித்தனியாக ஒவ்வொரு உடல் அங்கங்களில் நிறுவக்கூடியதாக இருக்கின்றது.

தேவை ஏற்படின் இதனை மனிதர்களிலும் பயன்படுத்தக்கூடியதாக இருத்தில் விசேட அம்சமாகும்

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply