விவாத பொருளாக மாறிய டிரம்பின் டுவிட்-அப்படி என்ன போட்டார்

trumoஅமெரிக்க ஜனாதிபதி தனது டுவிட்டர் பக்கத்தில் WE என்ற வார்த்தையை டுவிட்டாக போட்டு பின்னர் அதை அழித்திருப்பது விவாத பொருளாக மாறியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் டுவிட்டர் பக்கத்தில் தனது அன்றாட நடவடிக்கைகள் குறித்தும், தனக்கு தோன்றும் கருத்துக்களையும் உடனுக்குடன் பதிவேற்றி வருகிறார்.

இந்நிலையில், நேற்று டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்திலிருந்து WE என்ற வார்த்தையை டுவிட் செய்தார்.

WE என்பது முழுமையில்லாத வாக்கியம் என்பதால் அவர் என்ன சொல்ல வருகிறார் என தெரியாமல் பலரும் குழம்பி போனார்கள்.

பின்னர் சில நிமிடங்களில் டிரம்ப் அந்த டுவிட்டை அழித்து விட்டார். ஆனால் அதற்குள் அந்த டுவீட்டை பலர் ஸ்கீரின் ஷாட் எடுத்து விட்டார்கள்.

பின்னர், டுவிட்டர் பயன்பாட்டாளர்கள் டிரம்ப் அந்த டுவிட்டில் என்ன கூற வந்திருப்பார் என பல கருத்துகளை கூறினார்கள்.

அதில் ஒருவர், WE Are Doomed (நாம் சபிக்கப்பட்டவர்கள்) என டிரம்ப் கூற வந்துள்ளதாக கிண்டலாக கூறியுள்ளார்.

இன்னொருவர், WEEKEND (வார இறுதி விடுமுறை) என டிரம்ப் கூற வந்து WE உடன் டுவிட்டை முடித்து விட்டதாக கூறியுள்ளார்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply