விஷால் கல்யாணம் எப்போது – பதில் அளித்த விஷால் அப்பா ஜி கே ரெட்டி

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் வளர்ந்த வரும் முன்னணி நடிகர். அதுமட்டுமில்லாமல் நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் என்ற பல பொறுப்புக்கள் தற்போது அவர் கையில் உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் விஷாலின் தந்தை ஒரு பேட்டியில் விஷால் கல்யாணம் எப்போ தான் நடக்கும் என்ற கேள்விக்கு ” நாங்களும் அதற்குத்தான் காத்திருக்கிறோம் , முதலில் இந்த படம் ரிலீஸ் ஆகட்டும் , அந்த படம் ரிலீஸ் ஆகட்டும் சொன்னான். அதன் பிறகு நடிகர் சங்க தேர்தல் முடியட்டும் என்றார். இப்போது நடிகர் சங்க கட்டிடம் முடிந்த உடனே என்னுடைய முதல் கல்யாணம் அங்கு தான் என்கிறான்.

இதற்கிடையில் அவரது தங்கைக்கு கல்யாணம் முடிவானது, தங்கச்சி கல்யாணம் முடியட்டும் அதற்கு பிறகு பார்த்துக்கலாம் என்று இப்போ சொல்கிறான். எல்லாரும் மனதில் ஒரு விஷயம் இருக்கும் நானும் காத்திருக்கிறான் பார்ப்போம் என்று கூறினார்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply