Tuesday , August 22 2017
விஷேட செய்திகள்
முகப்பு / மருத்துவம் / பாட்டி வைத்தியம் / வேப்பிலையின் மருத்துவ குணங்கள்

வேப்பிலையின் மருத்துவ குணங்கள்

Neemவேப்ப மரத்தின் அடியில் அமர்வதாலும், அதன் காற்றை சுவாசிப்பதாலும், ஒருவிதமான மன அமைதி கிடைக்கிறது. அதுமட்டுமன்றி நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு பெருக்கக் கூடிய சக்தியும் வேப்ப மரத்திற்கு காணப்படுகின்றது.

எம்மில் பலருக்கு இது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே வேப்பிலையின் மருத்துவ குணங்களைப் பற்றி பார்க்கலாம்.

*வயிற்று பிரச்சினைகளை தீர்க்கக் கூடியது. புற்றுநோய் வராமலும் தடுக்கிறது. கிருமிகளை அழிக்கக்கூடிய சக்தியும் வேப்ப மரத்திற்கு உண்டு.

*வயிற்றில் பூச்சி இருந்தால் தினமும் வேப்பம்பழத்தை சாப்பிடலாம். வேப்பிலையை எலுமிச்சை சாற்றுடன் கலந்து அரைத்து தலைக்கு தேய்க்க பித்தத்தால் ஏற்படும் மயக்கம் சரியாகும்.

*குமட்டல், வாந்தி, மயக்கம் போன்றவை குணமாகும். மேலும், மலேரியாவை குணப்படுத்தும் தன்மை வேப்பிலைக்கு இருக்கிறது. நோய் எதிர்ப்பு செல்கள் அதிகரிக்கும். வேப்பிலை கசாயம் கிருமிகளை கொன்று காய்ச்சலை குணப்படுத்தும் தன்மை கொண்டதாகும்.

*தினமும் காலை நேரத்தில் 10 வேப்பங்கொழுந்து எடுத்து அதனை 5 மிளகுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலேரியா காய்ச்சல் குணமடையும். வேப்பங்காயை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.

*வேப்பங்குச்சியால் தினந்தோறும் பல் துலக்கினால் பற்கள் வலிமை பெறுவதோடு, ஈறுகள் பிரச்சினையும் இருக்காது. பித்தவெடிப்பிற்கு வேப்பிலை சிறந்த மருந்தாக பயன்படுகின்றது.

*வேப்பிலை மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசி வந்தால் பித்தவெடிப்பு மற்றும் கால் பாதம் எரிச்சல் போன்றவை குணமடையும்.

பதிவாளர் பற்றி

கருத்தை பதிக

உங்களின் மின்னஞ்சல் வெளியிடப்படமாட்டாது. அவசியமான களங்கள் குறியிடப்பட்டுள்ளது. *

*

Scroll To Top