வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது

118239572PHIஇன்று மேற்கொள்ளப்படவிருந்த பரந்தளவிலான வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளதாக இலங்கை பொது மக்கள் சுகாதார பரிசோதகர்களின் சங்கம் தெரிவிக்கின்றது.

அரச நிர்வாக அமைச்சருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டதாக அந்த சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் அத தெரணவிற்கு தெரிவித்தார்.

நிர்வாக சேவை போட்டிப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு இதுவரை சுகாதார பரிசோதகர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகள் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply