வேலை நேர்காணலிற்கு செல்ல கடையில் திருடியவருக்கு ஆடை வாங்கி கொடுத்த பொலிஸ் அதிகாரி

ரொறொன்ரோ பொலிஸ் அதிகாரி ஒருவர் கடையில் திருடிய ஒருவருக்கு சேர்ட் ஒன்றையும் ரை ஒன்றையும் வாங்கி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. இந்த இளைஞன் வேலை நேர்காணல் ஒன்றிற்கு செல்வதற்கு ஆடைகள் தேவைப்பட்டதால் இவ்வாறு செய்ததாக தெரிவித்ததால் இளைஞன் சரியான வாழ்க்கைப்பாதையில் செல்வதற்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுப்பதற்காக இதனை செய்ததாக அதிகாரி தெரிவித்தார்.

திங்கள்கிழமை தன்னையும் தனது சக அதிகாரி ஒருவரையும் யேன் வீதியில் அமைந்துள்ள வால்மார்ட் அழைத்து தங்கள் கடையில் ஞாயிற்று கிழமை இரவு திருட்டு சம்பவம் ஒன்று குறித்து தெரிவித்ததாக கான்ஸ்டபில் நிரன் ஜெயநேசன் தெரிவித்துள்ளார்.

தாங்கள் அங்கு சென்றபோது கடையின் இழப்பு-தடுப்பு அதிகாரி 18-வயதுடைய மனிதனொருவர் தங்கள் கடையில் சேர்ட், ரை மற்றும் காலுறைகளை திருடியதற்காக பிடித்து வைத்திருந்தார்.

நபருடன் ஜெயநேசன் கதைத பின்னர் குறிப்பிட்ட இளைஞன் வேலை நேர்காணல் ஒன்றிற்கு செல்வதற்கு தனக்கு இவைகள் தேவைப்பட்டதால் இவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார்.

வாழக்கையில் தான் எதிர் நோக்கும் இன்னல்களையும் அவற்றிலிருந்து மீண்டு தனது குடும்பத்தினருக்கு உதவுவதற்கும் வேலை ஒன்றை தேட முயல்வது தெரியவந்துள்ளது.

இதனை அறிந்து கொண்ட ஜெயநேசன் திருடியவரை குற்றசாட்டுக்கள் எதுவுமின்றி விட்டதுடன் மனிதனிற்கு தேவையான ஆடைகளை தானே வாங்கியும் கொடுத்தார்.

வேலை கிடைக்க வேண்டும் என்பதை தவிர வேறு எந்த காரணமும் இல்லை எனவும் அதிகாரி தெரிவித்தார். மனிதன் உண்மையில் தவறு செய்துள்ளார் எனவும் கூறினார். அது மட்டுமன்றி 31வது டிவிசனை சேர்ந்த இந்த அதிகாரி மனிதனிற்கு உதவ தனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததெனவும் தெரிவித்தார்.

பொலிஸ் அதிகாரிகள் தினமும் இவ்வாறு செய்கின்றனர் ஆனால் நாங்கள் எந்த அங்கீகாரத்தையும் பார்ப்பதில்லை எனவும் கூறினார்.

மக்களிற்கு உதவுவது காவல் துறையின் முக்கிய பகுதியாகும்.

31வது டிவிசன் Staff Sgt. போல் பொயிஸ் அதிகாரியின் முடிவை பாராட்டினார்.

 

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply