வௌ்ளவத்தை கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

வௌ்ளவத்தை – சவோய் திரையரங்கிற்கு அருகிலுள்ள அடுக்குமாடி கட்டடம் ஒன்று இன்று காலை இடிந்து விழுந்த விபத்தில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவரே உயிரிழந்துள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் கூறியுள்ளார்.

வௌ்ளவத்தை – சவோய் திரையரங்கிற்கு அருகிலுள்ள அடுக்குமாடி கட்டடம் ஒன்று இன்று காலை இடிந்து விழுந்த விபத்தில் காயமடைந்த 14 பேர் களுபோவில வைத்தியசாலையிலும் 7 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply